இந்தியர்கள் உலகமுழுவதும் உள்ள நாடுகளில் முக்கிய பதவிகளில் கோலோச்சி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்தவகையில் அமெரிக்காவின் தலைமையகமாக இருக்கும் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்கள் முக்கிய பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.
2009 முதல் 2010 வரை ஒபாமா ஆட்சில் இருந்தபோது ப்ரியா சிங் என்பவர் வெள்ளை மாளிகை பத்திரிகையில் உதவியாளராக (White House Press Assistant) இருந்தார். அதன் பின் 2017 முதல் 2019 வரை டிரம்ப் ஆட்சில் ராஜ் ஷா என்பவர் வெள்ளை மாளிகையின் துணை செய்திச் செயலாளராக (Deputy Press Secretary) பணியாற்றினார். இதையடுத்து வேதாந்த் படேல் என்ற இந்தியர் தற்போதுவுள்ள ஜோ பைடன் ஆட்சில் வெள்ளை மாளிகையில் உதவி செய்தி செயலாளராக (Assistant Press Secretary) பணியாற்றி வருகிறார்.
இவரை ‘அதீத திறமைசாலி’ மற்றும் நம் அனைவருக்கும் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் ஜனாதிபதிக்கு உதவுகிறார் என்று வெள்ளிமளிகையில் பத்திரிகை செயலாளராக பணிபுரியும் ஜென் சாகி (Jen Psaki) என்பவர் பாராட்டியுள்ளார்.
32 வயதான வேதாந்த், இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். பின்னர் 1991-ல் தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். இவர் டிசம்பர் 2012 முதல் முன்னாள் காங்கிரஸ்காரரான மைக் ஹோண்டாவின் துணைத் தகவல் தொடர்பு இயக்குநராக தனது பணியைத் தொடங்கினார்.
அதன்பின் 2015-2017 வரை மைக் ஹோண்டாவின் தகவல் தொடர்பு இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் 2017- 2018 வரை AAPI மீடியாவின் பிராந்திய செய்திச் செயலாளராகவும் இயக்குநராகவும் 2018-2019 வரை இந்திய அமெரிக்க காங்கிரஸ் பெண் பிரமிளா ஜெயபாலின் தகவல் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றினார். தற்போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உதவி செய்தி செயலாளராக (Assistant Press Secretary) பணியாற்றி வருகிறார்.
இது பற்றிக் கூறிய வேதாந்த், ‘நாங்கள் 1991 இல் இங்கு(US) குடிபெயர்ந்தோம், அவர்களின் (பெற்றோரின்) தியாகங்கள் மற்றும் கடின உழைப்பின் காரணமாகத்தான் இன்று நான் இந்த வெள்ளை மாளிகையில் அமர்ந்து பணியாற்ற முடிந்தது” என்று கூறினார்.
வேதாந்த் பற்றி புகழ்ந்து பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி இவரை ‘அதீத திறமைசாலி’ என்று குறிப்பிட்டு சிறந்த எழுத்தாளர் மற்றும் அரசாங்கத்தில் மிகவும் பிரகாசமான வாழ்க்கை அவருக்கு இருப்பதாக கூறினார். மேலும் “எனக்கு உதவ, நம் அனைவருக்கும் உதவ, ஒவ்வொரு நாளும் ஜனாதிபதிக்கு உதவ அவர் செய்யும் அனைத்தும் அதிசயக்கும் வகையில் உள்ளது’ என்று பாராட்டியுள்ளார். இவ்வாறு அமெரிக்கா இந்தியாவைச் சேர்ந்தவர்களை பாராட்டுவது அரிது. எனவே வேதாந்த் பற்றி வெள்ளை மாளிகை புகழ்ந்து பேசியது பேசுபொருளாகியுள்ளது.