சென்னை: தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக ஈடுபடுகிறது. தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம்,பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.