கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டம் மாரியம்மனஹள்ளி கிராத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு 12.30 மணியளவில் திடீரென ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொணடு இருந்ததால், அவர்கள் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.. உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் நலனை தமிழக அரசு காக்கும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்