அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கனியமூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம் வட்டம், கனியமூர் கை காட்டி, கச்சிராயபாளையம் பிரிவு சென்னை to சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் மற்றும் நிர்ந்தர இடம் மற்றும் நிலையான பஸ் நிறுத்தம் ஆசிரியர் பற்றாகுறை போன்ற அடிப்படை தேவைகளுக்காக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்தால் கள்ளக்குறிச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கள்ளகுறிச்சி மாவட்டம் வட்டம்,கனியமூர் கை காட்டி கச்சிராயபாளையம் பிரிவு சென்னை to சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு கல்லூரி மாணவர்கள் நடத்தும் சாலை மறியல் போராட்டம்,
அடிப்படை வசதிகள் மற்றும் நிர்ந்தர இடம் மற்றும் நிலையான பஸ் நிறுத்தம் ஆசிரியர் பற்றாகுறை போன்ற அடிப்படை தேவைகளுக்காக, pic.twitter.com/4nsok7IIQZ— Sathyaraj (@Sathyar12023803) April 8, 2022
மேலும் ஒரு அண்மை செய்தி || திருவள்ளூர் மாவட்டம், பொன்னேர் பகுதியில் அரசு கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று காலை முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி ஒருவருக்கு உதவிப் பேராசிரியர் செல்போனில் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவ-மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின் போது மாணவ-மாணவிகள் கோஷமிட்டு வருகின்றனர்.