கஷ்ட காலத்தில் போன் போட்டு உதவிய ரஜினி: பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி..!

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர்
ஆர்.வி. உதயகுமார்
. இவர் இயக்கத்தில் உருவான கிழக்கு வாசல், பொன்னுமணி, சின்னக்கவுண்டர், எஜமான் மற்றும் சிங்கார வேலன் போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்தது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் தனது படங்களில் தொடர்ந்து பாடல்களையும் எழுதி கவனத்தை ஈர்த்தவர் ஆர் வி. உதயகுமார். இந்நிலையில் ‘
சிட்தி
‘ படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய உதயகுமார், சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த்
பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடிகர் ரஜினி திரைத்துறையினருக்கு செய்த உதவிகள் பற்றி பேசினார். அவரது பேச்சில், தயாரிப்பாளர் ராஜன் ஹீரோக்களை திட்டுகிறார். அது தவறு. கொரோனா காலத்தில் இயக்குனர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் போன் செய்து, எவ்வளவு பேர் கஷ்டத்தில் இருக்கீறீர்கள் என கேட்டார்.

விக்ரம் பிரபுவுக்கு ஒரு ஹிட் பார்சல்: ‘டாணாக்காரன்’ படத்தின் முழு விமர்சனம்..!

நாங்கள் உறுப்பினர்கள் மொத்தம் 2500 பேர் இருக்கிறார்கள். அதில் 10 பேர்தான் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்றோம். அதைக் கேட்டு நீங்களே ஒரு தொகை சொல்லுங்கள் என்றார். அதே போல எழுத்தாளர் சங்கத்துக்கும் உதவி வேண்டும் என்று கேட்டோம். எழுத்தாளர் சங்கத்திற்கும் உதவினார் எனக் கூறியுள்ளார். மேலும் விஜயகாந்த் பற்றியும் புகழ்ந்து பேசியுள்ளார் ஆர்.வி. உதயகுமார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தளபதி”கள் சந்திப்பு; வைரலாகும் நிகழ்வு !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.