புதுச்சேரி : ‘காலாப்பட்டில் இயங்கும் அரசு சிறப்பு பள்ளியில் தமிழக மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்’ என, சமூக நலத் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஆனந்தரங்கப்பிள்ளை செவித்திறன் குன்றிய மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகள் சிறப்பு பள்ளி, 1963ம் ஆண்டு முதல், காலாப்பட்டு பிள்ளைச்சாவடியில் செயல்பட்டு வருகிறது.இதில் புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், நாகை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகளும் இதுவரை பயன்பெற்று வந்தனர்.
2021 முதல் புதுச்சேரி சார்ந்த குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி வந்தது.அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் பயன்பெற, முதல்வர் ரங்கசாமி ஆலோசனைப் படி, ஏற்கனவே செயல்பட்டது போல், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை சேர்ந்த வாய்பேச இயலாத, செவித்திறன் குன்றிய, பார்வையற்ற குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
புதுச்சேரி : ‘காலாப்பட்டில் இயங்கும் அரசு சிறப்பு பள்ளியில் தமிழக மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்’ என, சமூக நலத் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.அமைச்சர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.