உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்றி, கீவ் தலைநகரை மிக வேகமாக கைப்பற்றிவிடலாம் என்று ரஷிய அதிபர் புதின் நினைத்துவிட்டார். அது அவர் செய்த தவறு என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லாயிட் ஆஸ்டின் மேலும் கூறியதாவது:-
உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்ற முடியும் என்று புதின் நினைத்தார். அது அவர் செய்த தவறு. தலைநகரைக் கைப்பற்றுவதற்கான தனது முயற்சிகளை புதின் கைவிட்டு இப்போது நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் கவனம் செலுத்துகிறார்.
ரஷ்ய படைகளை உக்ரைன் ராணுவம் கடுமையாக தாக்கியதையடுத்து, கீவ் நகரை கைப்பற்றுவதை கைவிட்டுவிட்டார் விளாடிமிர் புதின்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு மானியம்- டெல்லி அரசு அறிவிப்பு