இடுக்கி: கேரளாவில் யானைக்கு உணவு கொடுக்க முயன்ற சிறுவனை அந்தயானை தும்பிக்கையால் சுற்றிவளைத்த நிலையில் சிறுவனின் தந்தை யானையிடமிருந்து அவனை போராடி மீட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. கேரள மாநிலம் மலப்புரம் கீழ்பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் நாசர். இவர் சொந்தமாக யானை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் தனது 4 வயது மகனுடன் சென்று அந்தயானைக்கு உணவளிக்க முயன்றுள்ளார். அப்பொழுது திடீரென மிரண்ட யானை, அருகில் சென்ற 4 வயது சிறுவனை தனது தும்பிக்கையால் சுற்றி வளைத்தது. இதனை கண்ட அச்சிறுவனின் தந்தை, யானையுடன் நீண்ட நேரம் போராடி தனது மகனை மீட்டார். இந்நிகழ்வு கடந்த 6 மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிலையில், இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.