கையில் சிவப்பு ரோஜா…பையில் அணுஆயுதம்: அதிகரிக்கும் புடினின் உயிர் பயம்!


ரஷ்யாவின் தீவிர தேசியவாதியான விளாடிமிர் ஷிரினோவ்ஸ்கி-யின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி புடின் பங்கேற்ற நிலையில், தன்னுடைய பாதுகாப்பிற்காக நீண்டதூரத்திற்கு தாக்கக்கூடிய சிறியரக அணுஆயுதத்தை தூக்கிக்கொண்டு வந்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா 45வது நாளாக தாக்குதலை நடத்தி வருவதற்கு மத்தியில், இந்த போர் தாக்குதலை அறிவித்த ரஷ்யாவின் முக்கிய அரசியல்வாதியான விளாடிமிர் ஷிரினோவ்ஸ்கி கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது இறுதிச்சடங்கில் மரியாதையை செலுத்துவதற்காக பங்கேற்ற ரஷ்யா ஜனாதிபதி புடின், தன்னுடைய பாதுகாப்பிற்காக நீண்டதூரத்திற்கு தாக்கக்கூடிய சிறியரக அணுஆயுதத்தை தூக்கிக்கொண்டு வந்துள்ளார்.

உக்ரைன் போரால் ரஷ்ய ஜனாதிபதியை கொலை செய்ய பல குழுக்கள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை புடினை எச்சரித்து வந்ததை தொடர்ந்து அவர் மிகுந்த அச்ச உணர்வில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் ஷிரினோவ்ஸ்கி-யின் இறுதிச்சடங்கிற்கு வந்தபோது அவரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கையில் கருப்பு நிற பெட்டியை(briefcase) தூக்கி கொண்டு புடினை பின்தொடர்ந்து வந்தார்.

இதில் எதிர்பாராத விதமாக எதுவும் அசம்பாவிதம் ஏற்பட்டால் ஜனாதிபதி புடினை பாதுகாப்பதற்காக, நீண்டதூரத்திற்கு தாக்கக்கூடிய சிறியரக அணுஆயுதம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் இதனை அவர் எங்கு சென்றாலும் தன்னுடன் எடுத்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரஷ்யாவின் தீவிர தேசியவாதியான விளாடிமிர் ஷிரினோவ்ஸ்கி-யின் இறுதிச்சடங்கில் புடின் பங்கேற்ற போது, துக்கத்தில் இருந்த அவரது உறவினர்கள் அனைவரும் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து ஜனாதிபதி புடின் ஷிரினோவ்ஸ்கியின் பாதங்களில் சிவப்புநிற ரோஜாக்களை வைத்து இறுதி மரியாதையை செலுத்தினர், அப்போது அவர் மிகுந்த துயரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    

அத்துமீறிய ரஷ்ய போர்விமானங்கள்…தொடங்கியது பின்லாந்து மீதான தாக்குதல்: அதிகரிக்கும் பதற்றம்! 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.