ரம்ஜானுக்கு அப்புறம்!மாநில கட்சில இருந்து தேசிய கட்சிக்கு தாவி மந்திரி பதவியை அலங்கரித்தவர். இவரோட சொகுசு பங்களா போட்டோ எல்லாம் சோஷியல் மீடியாவுல பரவி, பலபேரு வயித்தெரிச்சல கிளப்பி இருந்திச்சி.இவருக்கும், இப்போ இருக்கற கட்சிக்கும், சமீப காலமாக இணக்கமான சூழல் இல்லையோன்னு தோணுது. தங்கள் சமுதாயத்துக்கு எதிரான ஹிஜாப் முதல் வியாபார தடை என பட்டியல் நீண்டுக்கிட்டே போகுது.இதுக்கு தேசிய கட்சியில இருந்து தலைவர்கள் யாரும் தங்களுக்கு பகிரங்கமாக குரல் கொடுக்கல, தன்னையும் பேச விடலன்னு வருத்தத்துல இருக்காரு. இதனால அவரு கட்சியை விட்டு விலகலாம்னு இருக்காராம்.இதனால எதிர்கட்சி தலைவரு அவர வீட்டுக்கு வரவச்சி பேசி இருக்காரு. ‘உனக்கு என்ன பிரச்னை; என்ன அதிருப்தி; ஏன் ராகுலை பார்க்க வரல’ன்னு அக்கறையாக கேட்டு இருக்காரு. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்னு சொல்லி இருக்காரு.ஆனா இவரு எதுவா இருந்தாலும் ரம்ஜான் முடிஞ்சி தான் என்னோட முடிவை சொல்லுவேன்னு சொல்லிட்டு வந்திருக்காறாம்!தேர்வு எழுதுவாரா?ஹிஜாப் போராட்டம் நடந்தப்ப தனியாளா கோஷம் போட்ட மாணவிக்கு அப்போ நல்ல மீடியா வெளிச்சம் கிடைச்சது. பல பேரு வந்து பாராட்டி பணம் கொடுத்து குளிர்விச்சிட்டு போயிருந்தாங்க.இதனால அப்போ என்னமோ அந்த மாணவியோட குடும்பத்துக்காரங்க சந்தோஷத்துல இருந்தாங்க. அதுக்கு அப்புறம் அவங்க நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வந்தததா வருத்தத்துல இருந்தாங்க.சர்வதேச பயங்கரவாத தலைவரு அந்த மாணவியை புகழ்ந்து ‘வீடியோ’ ஒண்ணு வெளியிட்டு இருக்கறாரு. இதனால அந்த குடும்பத்துக்கு நடுக்கம் ஆரம்பமாயிடுச்சாம்.’நம்ம பொண்ணு அப்படி கோஷம் போட்டுருக்க கூடாது’ன்னு அந்த சம்பவத்த நெனச்சி, குடும்பத்தினர் வேதனைப்பட்டுட்டு இருக்காங்க. இதனால பெரிசா ஏதாவது விளைவு வருமோன்னு பீதில இருக்காங்க.இந்த நேரத்துல இன்னும் சில நாள்ல பி.யு.சி., தேர்வு ஆரம்பமாக இருக்கு. இதுக்கு ஹிஜாப்புடன் வந்தால் தேர்வு எழுத அனுமதி இல்லன்னு கவர்மென்ட்டு சொல்லிடுச்சி. அதனால அந்த மாணவி ஹிஜாப் கழட்டி வச்சிட்டு தேர்வு எழுதுமா அல்லது ஹிஜாப்புக்காக தேர்வை புறக்கணிக்குமான்னு ஒரு கேள்வி எழுந்திருக்கு.அவரோட முடிவு என்னான்னு தெரிஞ்சிக்க எல்லாரும் ஆர்வமா இருக்காங்களாம்!அமைச்சருக்கு எதிர்ப்பு!ஆளும் கட்சில போலீஸ் அமைச்சரா இருப்பவரு அப்பப்ப ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசுறாரு. தவளை தன் வாயால் கெடும்கிற மாதிரி அவர் கொடுக்கற ஸ்டேட்மென்ட் சில சமயம் சிக்கலை ஏற்படுத்தி இருக்கு.அதே மாதிரி இப்பவும் தலித் வாலிபர் கொலை வழக்குல இவரு பேசினது கவர்மென்ட்டுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்திருக்கு. இதனால இவருக்கு இப்ப உள்கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி இருக்காம்.அவரோட அமைச்சர் பதவியை பறிக்கணும்னு நெருக்கடி கொடுத்து வர்றாங்களாம். டில்லி தலைவர்களும் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டு இருக்காங்களாம். அதுக்கு அப்புறம் அமைச்சர் பதவியை பறிக்கறது குறித்து முடிவு பண்ண போறாங்களாம்.எதிர்க்கட்சில ஆரம்பத்துல இருந்தே இவரு அமைச்சர் பதவிக்கு சரிப்பட்டு வர மாட்டாருன்னு சொல்லிட்டு இருந்தாங்க. இப்போது இவருக்கு எதிரா கம்பளைன்ட் கொடுத்திருக்காங்களாம்!மறுபடியும் மோதல்!எல்லை மாவட்டத்தை மூணா பிரிக்கணும்னு கத்தியான அமைச்சரு பேச ஆரம்பிச்சி இருக்காரு. இதுக்கு அந்த மாவட்டத்துல கட்சிகளிடையே ஆதரவும் இருக்கு, எதிர்ப்பும் இருக்கு.குறிப்பாக சி.டி., விவகாரத்துல பதவியை இழந்தவருக்கு கோவத்த வரவழைச்சி இருக்கு. ஏன்னா அவரு மாவட்டத்தை ரெண்டா பிரிக்கணும்னு நினைச்சிட்டு இருக்காரு. ரெண்டாவது மாவட்டத்துக்கு தன்னோட தொகுதியை தலையிடமாக்கணும்னு ஆசையா இருக்காரு.ஆனா இப்ப கோரிக்கை வச்சிருக்கற அமைச்சரின் லிஸ்ட் தன்னோட தொகுதியோட பேரை சொல்லலைன்னு கோவம் வந்திருக்கு. அதோட அமைச்சருக்கு கதர் கட்சியை சேர்ந்த பெண் எம்எல்லேவும் ஆதரவு தெரிவிச்சி இருக்காங்க.இவருக்கும் பதவியை இழந்த அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தம். ரெண்டு பேருமே ஒருத்தர ஒருத்தரு வீழ்த்தணும்னு நெனச்சிட்டு இருக்கறவங்க. இந்த நேரத்துல அமைச்சருக்கு ஆதரவு தெரிவிச்ச அம்மணி மேல செம கடுப்புல இருக்காறாம் சி.டி.,
Advertisement