இந்தியா முழுவதும் வெயில் மோசமாக இருக்கும் நிலையில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க வேண்டும் என்பதற்காக இளநீர், நொங்கு, ஜூஸ் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் வாங்கி வரும் நிலையில் எலுமிச்சை-க்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
கோடைக் காலத்திற்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சை விலை 200 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது இரண்டு மடங்கு அதிகரித்து 400 ரூபாய் வரைவில் உயர்ந்துள்ளது.
விளிம்பில் இருக்கும் இலங்கை.. 40000 மெட்ரிக் டன் டீசல் கொண்டுபோய்ச் சேர்த்த இந்தியா..!
கோடைக் காலம்
பொதுவாகக் கோடை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி குடிக்கும் பட்ஜெட் கூல்டிரிங்ஸ் என்றால் அது லெமென் ஜூஸ் தான். கடைகளில் மட்டும் அல்லாமல் வீட்டிலேயும் வெயில் காலத்தில் அதிகளவில் எலுமிச்சை பயன்படுத்தும் காரணத்தால் சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் இதன் விலையும் அதிகரித்துள்ளது.
ஜெய்ப்பூர்
இந்நிலையில் ஜெய்ப்பூரில் வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில், இதற்கு இணையாக எலுமிச்சை விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 400 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் நாட்டின் பல இடத்தில் எலுமிச்சை கிடைக்காத நிலையும் ஏற்பட்டு உள்ளது.
400 ரூபாய்
ஜெய்ப்பூரில் ஒரு கிலோ எலுமிச்சை 340 ரூபாயாக இருந்த நிலையில், 24 மணிநேரத்தில் 60 ரூபாய் அதிகரித்து 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு எலுமிச்சை பழம் 30 ரூபாய் என்ற விலையிலும் பல இடத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல், தங்கம்
எப்படி மக்கள் பெட்ரோல், டீசல், தங்கத்தை எவ்வளவு விலை உயர்ந்தாலும் தொடர்ந்து வாங்குவது போல், தற்போது வெயிலின் தாக்கத்தின் காரணமாக எலுமிச்சை விலை அதிகமானாலும் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
விலை உயர்வு
இரண்டு வாரத்திற்கு முன்பு கூட மொத்த விற்பனை சந்தையில் எலுமிச்சை விலை 140-150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 220-450 ரூபாய் வரையில் இந்தியா முழுவதும் விலை நிலவுகிறது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிலோ எலுமிச்சை 175 ரூபாயாக உள்ளது.
Lemon prices cross 400 rupees per kg in Rajasthan’s Jaipur, check price in tamilnadu
Lemon prices cross 400 rupees per kg in Rajasthan’s Jaipur, check the price in Tamilnadu சுட்டெரிக்கும் வெயில்.. எலுமிச்சை விலை 400 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்..!