சென்னை || வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தறுப்பு.. மது போதையில் ரவுடியின் அராஜகம்..!

தனியாக வீட்டில் இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி, எம்.ஜி.ஆர் நகர், 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி அலமேலு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு  வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, 30 வயது மதிக்கதக்க இளைஞர் அவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

பள்ளியில் குழந்தைகள் அழைக்க வராதாதால் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். ரமேஷ் வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்தவெள்ளத்தில் கிடந்ததுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவாம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.