மத்தியப் பிரதேசத்தில் காவல்நிலையத்தில் செய்தியாளர் உட்பட 8 பேரை ஆடைகளைக் களைந்து உள்ளாடையுடன் நிற்க வைத்தது தொடர்பாகக் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகச் செய்தி வெளியிட்டதாகக் கூறி ஏப்ரல் 2 அன்று செய்தியாளர், யூடியுபர் உட்பட 8 பேரைப் பிடித்துச் சென்று கோட்வாலி காவல்நிலையத்தில் அவர்களின் ஆடைகளைக் களைந்து உள்ளாடையுடன் நிற்க வைத்துள்ளனர். விசாரணைக்குப் பின் அவர்களை விடுவித்தாலும் இது குறித்த படம் சமூக வலைத்தளத்தில் பரவியது.
இந்நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், கோட்வாலி காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.