லோக்சபாவில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா சீரியஸாக பேசிக் கொண்டிருந்தபோது அவருக்குப் பின்னால் இருந்த சசி தரூரும், பரூக்குக்கு அருகில் இருந்த தேசியவாத காங்கிரஸ் எம். பி. சுப்ரியா சூலேவும் குசுகுசுவென பேசியது வைரலாகி விட்டது. இதுகுறித்து
சசி தரூர்
விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபாவில் நேற்று ஒரு கலகலப்பான சம்பவம் நடந்தேறியது. உக்ரைன் விவகாரம் தொடர்பான விவாதம் சபையில் நடந்து கொண்டிரு்நதது. அதில் கலந்து கொண்டு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே அமர்ந்திருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்
சுப்ரியா சூலே
, பின்னர் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்பி சசி தரூரிடம் ஏதோ கேட்டார்.
சசி தரூர் சற்று தள்ளி அமர்ந்திருந்ததாலும், சுப்ரியே மெதுவாக கிசுகிசுத்தபடி பேசியதாலும் அவருக்கு சரியாக கேட்கவில்லை போலும். இதனால் தனது இருக்கையிலிருந்து சற்று நகர்ந்து வந்து சுப்ரியா கூறியதைக் கேட்டார் சசி தரூர். மேசையில் முகத்தை பதித்தபடி அவர் கேட்டதும், தனது இருக்கையிலிருந்து சற்று எக்கியபடி சுப்ரியா பேசியதும், அந்தப் பக்கம் பரூக் அப்துல்லா சீரியஸாக பேசிக் கொண்டிருந்ததும் .. இந்த வீடியோ வைரலாகி விட்டது.
பரூக் அப்துல்லா சீரியஸாக பேசிக் கொண்டிருந்தபோது இந்த இருவரும் இப்படி குசுகுசுப்பாக பேசியது என்ன என்றும், அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்றும் கேட்டு பலரும் கலகலப்பான கமெண்ட் போட ஆரம்பித்து விட்டனர். இந்த வீடியோ மின்னல் வேகத்தில் வைரலானதால் சசி தரூர் ஒரு விளக்கம் கொடுத்து டிவீட் போட்டுள்ளார்.
அந்த டிவீட்டில், நானும், சுப்ரியா சூலேவும் பேசியதை வைத்து பலரும் ஜாலியாக கமெண்ட் செய்து கொண்டுள்ளனர். அது வேறு ஒன்றுமில்லை, ஒரு கொள்கைக் குறிப்பு குறித்து என்னிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார் சுப்ரியா. பரூக் அப்துல்லா பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் அவர் மிகவும் கிசுகிசுப்பான குரலில் பேசியதால் நான் சற்று நகர்ந்து வந்து அவருக்குப் பதிலளித்தேன் என்று கூறியிருந்தார்.
அத்தோடு நிற்கவில்லை. இன்னொரு டிவீட்டும் போட்டிருந்தார். பிரபலமான ராஜேஷ் கண்ணா – ஷர்மிளா தாகூர் இணைந்து நடித்த அமர் பிரேம் படத்தில் இடம் பெற்ற ஒரு இந்திப் பாடலின் வரிகளை அதில் எழுதியிருந்தார். அதை சுப்ரியாவுக்கும் டேக் செய்திருந்தார்.
இந்த வீடியோ குறித்து பலரும் கலகலப்பான கமெண்ட்டுகளை குவித்துக் கொண்டுள்ளனர். இப்படித்தான் சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியானது. அதாவது தமிழச்சி தங்கப் பாண்டியன், சுப்ரியா சூலே, ஜோதிமணி உள்ளிட்ட பெண் எம்.பிக்களுடன், சசி தரூர் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ அது. அதையும் வைத்து பலரும் செமையாக கலாய்த்தனர். இந்த நிலையில் இப்போது இந்த வீடியோ கிளிப் வைரலாகி விட்டது.
சசி தரூர் சும்மா இருந்தாலும், இந்த நெட்டிசன்கள் சும்மாவே இருக்கிறதில்லை.. எதையாவது கதை கட்டி குடும்பத்துல குண்டு வீசிட்டுப் போயிர்றாங்க!!