தனுஷை பிரிந்த பின்பு 'அந்த' விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சமீப காலத்தில் கோலிவுட் வட்டாரத்திலே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் அது தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரஸ்பரம் பிரியவுள்ளதாக இருவரும் அறிவித்தனர். பிரிவிற்கு பின்னர் இருவரும் தங்களது பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார்.

Beast: ரிலீசுக்கு முன்பாகவே சாதனை புரிந்த ‘பீஸ்ட்’.. தளபதி வேற லெவல்பா..!

அதே போல் தனுஷும் தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் ‘வாத்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.

தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் வொர்க்கவுட், யோக பயிற்சி என பிசியாக உள்ளார். ஒருசிலர் ஐஸ்வர்யாவின் பதிவுகளை திட்டி தீர்த்து வந்தாலும், பலர் அவர் பிட்னஸில் கவனம் செலுத்தி வருவதற்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். ஐஸ்வர்யா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தளபதி”கள் சந்திப்பு; வைரலாகும் நிகழ்வு !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.