சென்னை: சொத்துவரியை தொடர்ந்து காலிமனைக்கான வரியும் 100% உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துவரிக்கான சீராய்வு பணிகள் நிறைவடைந்தவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்யப்படும் என மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.