தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சக்கரபாணி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.
இதில் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு,
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தனித்து இயங்கும் கண்காணப்பு கேமராக்கள் வழங்கப்படும்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நடைமுறைகள் கணினிமயமாக்கப்படும்
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் / எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும்.
அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும்.
பொதுவிநியோக திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் (கேழ்வரகு) வழங்கப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.
கான்கிரீட் தரை மற்றும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் மொத்தம் ரூ.70.75 கோடியில் நபார்டு நிதி உதவியுடன் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.