தள்ளி நில்லுடி.. ராஷ்மிகா மந்தனாவை விளாசிய பிக்பாஸ் பிரபலம்..!

விஜய்யின் ‘
பீஸ்ட்
‘ ரிலீசுக்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். கடந்த வாரம் ‘பீஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தப்படத்தில் நடித்து முடித்துள்ளார்
விஜய்
.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘பீஸ்ட்’ படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 66-வது படம் உருவாக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு மகள் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தனுஷை பிரிந்த பின்பு ‘அந்த’ விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘
தளபதி 66
‘ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப்படத்தில்
ராஷ்மிகா மந்தனா
விஜய் ஜோடியாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

‘தளபதி 66’ பட பூஜையில் விஜய்யை கொஞ்சுவது, திருஷ்டி கழிப்பது என பல அட்ராசிட்டி செய்தார் ராஷ்மிகா. இந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் விஜய்யுடன் ராஷ்மிகா நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிக்பாஸ் மூலம் பிரபலமான
காஜல் பசுபதி
, ‘தள்ளி நில்லுடி’ என கேப்சன் கொடுத்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு விஜய் ரசிகர்கள் பலரும் பொறமையா..? என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

“பீஸ்ட்” படத்தின் டிக்கெட் விலை உயர்வு ! ரசிகர்கள் SHOCK..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.