தியேட்டர் தர மறுப்பு : படத்தைத் தள்ளி வைத்த ராம்கோபால் வர்மா
சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நைனா கங்குலி, அப்சரா மற்றும் பலர் நடிக்க இந்தியில் உருவாகியுள்ள படம் 'டேஞ்சரஸ்'. இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து இன்று வெளியிட இருந்தார் வர்மா.
ஆனால், சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இந்தப் படத்தை 'லெஸ்பியன்' படம் என்று கூறி திரையிட மறுத்து தியேட்டர்களைத் தரவில்லை என ராம்கோபால் வர்மா குற்றம் சாட்டியுள்ளார். “பாலிவுட், டோலிவுட்டில் நூற்றுக்கணக்கான கமர்ஷியல் படங்களில் ஆணும், பெண்ணும் காதலிப்பதாக வைத்து அவர்களுக்குள் முத்தக் காட்சிகளை வைப்பார்கள். நான் பெண்ணும், பெண்ணும் காதலிப்பதாக வைத்து முத்தக் காட்சிகளை வைத்துள்ளேன். படத்தில் அவர்கள் ஏன் 'லெஸ்பியன்' ஆனார்கள் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஒரே பாலின திருமணம் பற்றி உச்சநீதிமன்றமே தீர்ப்பு சொல்லிவிட்டது. ஆணும் பெண்ணும் முத்தம் கொடுத்துக் கொள்வது சகஜம், அதே பெண்ணும் பெண்ணும் முத்தம் கொடுப்பது சகஜமல்ல. அதனால், இதை செக்ஸ் சினிமா என்று பார்க்கிறார்கள். எனவே, படத்திற்குத் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து என்ன செய்வது என யோசித்து, அதைச் சரி செய்து தற்போது பட வெளியீட்டை தள்ளி வைக்கிறோம்,” என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.