திருச்சி: திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சியில் ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர், உறையூர், மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம், காஜாமலை, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.