தேசிய பங்கு சந்தையில் மோசடி: அமலாக்கத் துறையினர் சோதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தேசிய பங்குச் சந்தையில் நடந்த மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினர், டில்லி மற்றும் ஹரியானாவின் குருகிராமில் உள்ள சில இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

latest tamil news

கடந்த 2013 முதல் 2016 வரை, என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் பதவி வகித்தார். அப்போது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ‘செபி’ எனப்படும், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது.

latest tamil news

முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தனக்கு ஆலோசகராக நியமித்து பல்வேறு சலுகைகளை வழங்கியதாக சித்ரா மீது புகார்கள் எழுந்தன.இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினர், நேற்று டில்லி மற்றும் ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒன்பது இடங்களில், அதிரடி சோதனை நடத்தினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.