வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: நீதிக்காக போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறேன் என பாக். பிரதமர் இம்ரான் நாட்டு மக்களிடம் உரையாடினார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன. இதையடுத்து பார்லி.யை சபாநாயகர் கலைத்தார். . இந்தப் பிரச்னை தொடர்பாக, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது .
அப்போதுபார்லிமென்டடில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநயகர் நிராகரித்து பார்லியை கலைக்க உத்தரவிட்டது சட்டவிரோதமானது.எனவே பார்லிமென்ட்டை கலைத்தது செல்லாது. பாராளுமன்றம் மீண்டும் செயல்பட
வேண்டும். வரும் 9-ம் தேதி நம்பிக்கை ஒட்டுடெடுப்பு நடத்த வேண்டும். என தெரிவித்தது.
இதையடுத்து நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உளள நிலையில், பிரதமர் இம்ரான் கான், நாட்டு மக்களிடம் உரையாடியது,
உச்சநீதிமன்ற உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது, பாக். தலைவர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்டு பின்னர் விலை போய்விட்டனர், ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.எனது ஆட்சியை கவிழ்க்க சர்வதேச அளவில் சதி நடக்கிறது. குறிப்பாக என்னை ஆட்சி கட்டிலிலிருந்து அகற்ற அமெரிக்கா துடிக்கிறது. இது போன்றவர்களிடமிருந்து பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும்.
நான் நீதிக்காக போராட்டம் நடத்திகொண்டிருக்கிறேன். யாருக்காகவும், எதற்காகவும், எனது கொள்கையை மாறறிக்கொள்ள மாட்டேன். பாகிஸ்தானின் தலைவிதியை மக்களிடம் விட்டு விடுகிறேன் இளைஞர்கள் தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். எதிர்கட்சிகளுக்கு அதிகாரம் மற்றும் பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. இவ்வாறு இம்ரான் பேசினார்.
Advertisement