கொலம்பியாவின் ஆன்டியோகியா பகுதிக்கு உட்பட்ட அப்ரியாக்கி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழையை பெய்து வருகிறது. இதன் விளைவாக அங்குள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில்
நிலச்சரிவு
ஏற்பட்டது. இதில் சிக்கி அங்கு பணிபுரிந்து வந்த 11 தொழிலாளர் உயிரிழந்தனர்.
இந்த சுரங்கம் அதிகாரபூர்வமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்துக்கு
கொலம்பியா
அதிபர் இவான் டியூக், ஆன்டியோகியா கவர்னர் அனிபல் கவிரியா ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் பெரேரா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் நிலச்சரிவு நிகழ்ந்து தொழிலாளர்கள் பலியாகியுள்ள சம்பவம் கொலம்பியா நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரயில் நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – 39 பேர் உயிரிழப்பு!
மலைத்தொடர்கள் அதிமுள்ள கொம்பியாவில் ஆண்டு முழுவதும் அவ்வப்போது கனமழை பொழிவதும், அதன் விளைவாக நிலச்சரிவு ஏற்படுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. 2017 இல் மொகோவா நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.