பணக்காரனா நீ? வரி கட்டு! செல்வந்தர்களுக்கு வரி விதிக்கும் இலங்கை

இலங்கையில் மோசமடைந்த பொருளாதார சீர்குலைவை சரிசெய்ய முடியாமல் திகைத்து நிற்கும் அந்நாட்டு அரசு அதிர்ச்சி அளிக்கும் முடிவை எடுத்துள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார சீர்கேட்டை ஓரளாவது சரி செய்ய வேண்டுமானால், அரசுக்கு வருமானம் வேண்டும். நிதியுதவிகள் தேவை. ஆனால் விரைவான வருவாயைப் பெற இலங்கை அரசு எடுத்திருக்கும் முடிவு வித்தியாசமாய் இருக்கிறது.

பணக்காரர்களுக்கு வரி விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எந்தவொரு வாக்கெடுப்பும் இன்றி, இலங்கை நாடாளுமன்றம், பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும், பிற்போக்கான கூடுதல் கட்டண மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

மேலும் படிக்க | பொருளாதார நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கும் இலங்கை

2020-21 நிதியாண்டில் 2 பில்லியன் இலங்கை ரூபாய்க்கு மேல் சம்பாதித்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட இந்த வரி மூலம் 100 பில்லியன் அளவிலான இலங்கை ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று இலங்கை அரசு எதிர்பார்க்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றையும் கோட்டாபய ராஜபக்ச அமைத்துள்ளார்.

இலங்கை அதிபரின் ஆலோசனைக் குழு மேற்கொள்ளும் பொறுப்புகளில், தொடர்புடைய இலங்கை நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஈடுபடும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், தற்போதைய கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்து இலங்கைக்கான நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்சியை நோக்கி வழிநடத்தும். ” என்று இலங்கை அதிபரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையும் குடும்ப அரசியலும்…

இலங்கையில் எரிபொருள், மின்சாரம், உணவு, மருந்து தட்டுப்பாடு காரணமாக ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் சர்வதேச இறையாண்மை பத்திரத்தை எவ்வாறு கட்டமைப்பது என்பதும் இலங்கையின் முன் உள்ள மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் பதற்றம்; ஊரடங்கு உத்தரவை மீறி இரவிலும் போராட்டம்

நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்றால், முதலில் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். இலங்கையின் மத்திய வங்கியின் கூற்றுப்படி, மார்ச் மாதத்தில் கையிருப்பு 16 சதவீதம் குறைந்து 1.93 பில்லியன் டாலர்களாக இருந்தது.

கடன் தரம் குறைவதால் இலங்கையால் வணிகக் கடன்களைப் பெற முடியவில்லை. நாடு $51 பில்லியன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் வசிக்கும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.