வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயத்திற்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சையத், இவரது அமைப்பு ஜமேத் உத் தாவா அமைப்பு, பயங்கரவாத அமைப்பு என ஐ.நா., பட்டியலிட்டு உள்ளது, மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது, பயங்கரவாதத்திற்கு, நிதி திரட்டி கொடுத்தது மற்றும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் நிதி அளித்தது என ஹபீஸ் சையத் மீது பல்வேறு வழக்குகள் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இவரது அமைப்பினை தடை செய்ய வேண்டும் என பாக்., அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.இந்நிலையில் மும்பை தாக்குதல் தொடர்பான ஒரு வழக்கு பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.
Advertisement