Tamilnadu Assembly Highlights : தமிழகத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்தநாள் (மார்ச் 19) வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு வேளான் மற்றும் பொது பட்ஜெட் தொடர்பான விவாரம் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 24 ந் தேதி வரை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன்பு சட்டசபையின் மானிய கோரிக்கை கூட்டம் தொடங்கியது. இதில் இன்று பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்
தொடர்ந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று கூறி அமைச்சர் எ.வ.வேலு, இந்த புறவழிச்சாலை அமைக்கும் திட்ட அறிக்கை நிறைவடைந்த உடன், திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சாலைகள் மேம்பாலங்கள் அமைக்க கால தாமதம் ஆவதற்கு காரணம் நிலம் கையகப்படுத்துவதுதான் என்றும், நிலம் எடுப்பு பணிகளக்கு மட்டும் வருவாய்த்துறையில், 5 டிஆர்ஓக்கள் தலைமையில், 144 ஸ்பஷல் தாசில்தார்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
மனனார்குடியில நம்மாழ்வார் விவசாய கல்லூரி அமைக்க வேண்டும் என்று, உறுப்பினர் டிஆர்பி ராஜா வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் எம்ஆர்.கே பன்னீர்செல்வம், விவசாய கல்லூரிகள் அமைப்பதில் சிக்கல் நிலப்பிரச்சினைதான் ஒரு விவசாய கல்லூரி அமைக்க 110 ஏக்கர் நிலம் வேண்டும். டிஆர்பி ராஜா எம்எல்ஏ நினைத்தால், அவரே மன்னார்குடியில் விவசாய கல்லூரி தொடங்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பை சட்டசபையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்கு மக்கள் நல பணியாளர்கள் தான் வீடு வீடாக சென்கின்றனர் என்று எம்எல்ஏ செல்லூர் ராஜூ குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல பணியாளர்களைத்தான் நீங்கள் நீக்கி விட்டீர்களே. மக்கள் தேடி மருத்துவம் திட்டத்தின் கீ்ழ், 7488 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை கூறித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில், 482 கோடி ஊழல் நடந்துள்ளது. ஒரு நபர் மட்டுமே தனது மனைவியின் பெயரில் 14 கோடி கடன் பெற்றுள்ளார். இது அமைச்சருக்கு தெரியாமல் எப்படி நடந்தது என்றும், கூட்டுறவுத்துறை ஊழல் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை தொடர்பான விசாதத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, இந்திய அஞ்சல் வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளி்ன் இல்லத்திற்கே அனுப்பப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் ரேஷன் கடைகளில் இனிமேல் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையில், நியாவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 நிலைகளிலும, மாவட்ட அளவில் 2 நிலைகளிலும், பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தொடர்ந்து உள்ளாட்சி கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டது. இதில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில், 75 சதவீதம் மத்தி அரசும், 25 சதவீதம் மாநில அரசும் வழங்குகிறது. அதன்படி 674 கோடி 84 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு ஏற்கனவே விடுவித்துள்ளது. மீதமுள்ள 25 சதவீத தொகையான 224 கோடி 94 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மாநில அரசு விடுவித்துள்ளது. இதன் மூலம் 100 நாள் வேலை திட்டத்தில், நடப்பு ஆண்டில் 8 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.