தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரம் 07-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக “அதிமுக உட்கட்சித் தேர்தல்… யார் கை ஓங்கும்? எடப்பாடியா, ஓ.பன்னீர்செல்வமா?” எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்டுகளில் சில…
Kaviyanandh K
அண்ணா திமுகவின் சமகால தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துவிட்டாா் இனி அஇஅதிமுகவின் முகம் எடப்பாடி .கே.பழனிச்சாமி அவா்கள் தான். அவாின் கையே ஒங்கி நிற்கிறது. எதிா்காலத்தில் அதிமுகவின் வெற்றியை எடப்பாடி பழனிசாமி அவா்கள் தான் படைப்பாா்
Nellai D Muthuselvam
ஓபிஎஸ் கரம் தான் ஓங்கும். அஇஅதிமுகவுக்கு தொண்டர் பலம் தென் மாவட்டங்களில் மிக அதிகம். அமமுகவால் வாக்குவங்கி பிரியாமல் இருந்திருந்தால் அஇஅதிமுக ஆட்சியை பிடித்து இருக்கும். ஓபிஎஸ்க்கு அஇஅதிமுக தலைவர் பதவி வழங்க வேண்டும். நாடாளுமன்ற அரசியலுக்கு ஓபிஎஸ் செல்ல வேண்டும்.
Er.M.SenthilKumar
EPS கை ஓங்குமா, OPS கை ஓங்குமா என்பதை விட அதிமுகவின் கை ஓங்க வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பமாக இருக்கும். ஜெ. மறைவுக்குப் பின் அமமுக உருவாகியும், பாஜக எமனாகியும் இரட்டை இலையை சிதைத்து வருவதால், அதிமுக ஒன்றுபட்டு ஒற்றை தலைமையின்கீழ் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Rajarajan Rajarajan
யார் கை ஓங்குதோ இல்லையா தெரியாது….
அதிமுக தொண்டர்கள் மத்தியில் அடிதடி நிச்சயம் உண்டு…
Ravichandramohan Kannan
இரட்டை மாதிரி EPS.Ops மாதிரி-அதிமுக இவர்கள் தலைமையில் ஒங்கி ஒலிக்கும்
Sathis Kumar Karikalan
பாஜக-வின் கை ஓங்கும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM