மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 2.52 கோடி வீடுகள் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுளளன. இதற்காக, 1.95 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பிரதான் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறத்தில் இதுவரை 58 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக 1.18 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு, தண்ணீர் இணைப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன.
இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் இது பெண்களின் அடையாளமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் வீடு வழங்குவதற்கான எங்கள் தீர்மானத்தில் நாங்கள் ஒரு முக்கியமான முயற்சியை எடுத்துள்ளோம். 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டும் பணி மக்களின் பங்களிப்புடன் மட்டுமே சாத்தியமாகியுள்ளன. அப்படை வசதிகளுடன் கூடிய இந்த வீடுகள் இன்று பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடையாளமாக மாறியுள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. இந்தியா-அமெரிக்கா மந்திரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை- 11ந் தேதி வாஷிங்டனில் நடைபெறுகிறது