பெங்களூரு-”இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வுக்கும், சீருடை கட்டாயம். ‘ஹிஜாப்’ அணிந்து வந்தால், தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:ஏப்ரல் 22 முதல் மே 18 வரை, இரண்டாம் ஆண்டு பி.யூ., தேர்வு நடக்கவுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.,யை போன்றே, இரண்டாம் ஆண்டு பி.யூ., தேர்வும் நடக்கும். ஹிஜாப் அணிந்து வந்தால், தேர்வு மையத்துக்குள் அனுமதி கிடைக்காது.கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை, பின்பற்றுவது கட்டாயம். சீருடையில் தேர்வெழுத வேண்டும். கர்நாடகாவின், 90 சதவீதம் கல்லுாரிகளில் சீருடை உள்ளது. 10 சதவீதம் கல்லுாரிகளில் மட்டும், சீருடை இல்லை.இத்தகைய கல்லுாரிகளில், மதம் சார்ந்த உடையணிந்து வரக்கூடாது. அந்தந்த கல்லுாரிகளின் உத்தரவுகளை, பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு-”இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வுக்கும், சீருடை கட்டாயம். ‘ஹிஜாப்’ அணிந்து வந்தால், தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.