’பீஸ்ட்’ கட்டண உயர்வுக்கு தியேட்டர்களுக்கு அனுமதி தரவில்லை; புதுச்சேரி அரசு

புதுச்சேரி: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வரும் வாரம் வெளியாகவுள்ள நிலையில், புதுச்சேரி திரையரங்குகளில் கட்டணம் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட், வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் திரையரங்குகளில் வரும் 13 முதல் 17ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக போர்டுகள் தயாரித்துள்ளனர்.

அதில் 3 ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 50ல் இருந்து ரூ.150ம், இரண்டாம் வகுப்பு ரூ. 75ல் இருந்து ரூ. 175 ம், முதல்வகுப்பு கட்டணம் ரூ. 100ல் இருந்து ரூ.200ம், பால்கனி ரூ. 150ல் இருந்து ரூ. 250ம், பாக்ஸ் ரூ. 160ல் இருந்து ரூ. 260ம் என்று உயர்த்தப்படுவதாக எழுதப்பட்டிருந்தது.

விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கூறியதாது: ” இதுவரை இதுபோல் நடந்ததில்லை. மக்களை ஏமாற்றும் செயல். எத்திரைப்படம் வந்தாலும் சரியான கட்டணமே வாங்க வேண்டும். பெரிய நடிகரின் படம் என்றால் ரூ.100 வரை அனைத்து வகுப்புகளுக்கும் உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு” என்று குற்றம் சாட்டினர்.

கட்டண உயர்வு கூறித்து ஆட்சியர் அலுவலக தரப்பில் விசாரித்தபோது, “புதுச்சேரியில் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி தரவில்லை” என்று குறிப்பிட்டனர்.

ஆனால் திரையரங்கு வட்டாரங்களோ, “பீஸ்ட் திரைப்படத்துக்கு கட்டணம் நான்கு நாட்களுக்கு அனைத்து வகுப்புகளிலும் ரூ. 100 உயர்த்தப்படவுள்ளது. அதற்காக போர்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வைக்காக இதுவரை வைக்கவில்லை. ஆனால் யாரோ அப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர்.” என்று கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.