புடின் படைகளை தெறிக்கவிடும் உக்ரைன் வீரர்கள்: இணையத்தில் வெளியாகியுள்ள புதிய வீடியோ


ரஷ்ய tankகள் இரண்டை உக்ரைன் இராணுவம் சிதறடிப்பதைக் காட்டும் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Mariupol நகருக்கு வெளியே, மக்கள் குடியிருப்புப் பகுதி ஒன்றின் அருகில் அமைந்துள்ள சாலையில் செல்லும் ரஷ்ய tankகள் இரண்டை சரமாரியாகத் தாக்கி வெடித்துச் சிதறடித்துள்ளது உக்ரைன் இராணுவம்.

உக்ரைன் வீரர்கள் தாக்குகிறார்கள் என்பதை உணர்ந்ததும் ரஷ்ய tankகள் அந்த இடத்திலிருந்து தப்பியோட முயல, உக்ரைன் இராணுவம் அவற்றை விடாமல் தாக்குவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

கடைசியில் அந்த tankகள் வெடித்துத் தீப்பந்தமாக சிதற, அவை அழிக்கப்பட்டதை உறுதி செய்வதுபோல மீண்டும் குண்டுமழை பொழிகிறது உக்ரைன் இராணுவம்.

ஆக, ரஷ்ய இராணுவத்துக்கு மீண்டும் ஒரு இழப்பு ஏற்பட்டுள்ளதை இந்த வீடியோ காட்டுகிறது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.