புஷ்பா படத்தில் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின் மூலமாக பேன் இந்தியா அளவில் ரசிகர்களை ஈர்த்த அல்லு அர்ஜுன் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சுவராஸ்யமான தகவல்கள் இதோ.
அல்லு அர்ஜுன் 2002-ல் அறிமுகமான படம் Gangothri. 20 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார்.
அல்லு பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அவருடைய 20 வயதில் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்வதற்கு முன்பு வரை அவர் வளர்ந்தது இங்குதான்.
அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த். தயாரிப்பாளரான இவருக்கு மூன்று மகன்கள், அல்லு அர்ஜுன் நடுப்பையன்.
கஷ்டமான நடன அசைவுகளையும் அசால்டாக செய்ய முடிவதற்கு காரணம் அவருக்கு ஜிம்னாஸ்டிக்ஸ், டான்ஸ் மீதிருந்த விருப்பம் தான்.
2003 ரங்கஸ்தலம் எடுத்த இயக்குனர் சுகுமாரன் உடன் பணியாற்றிய ‘ஆர்யா’ படம் பயங்கர ஹிட். அப்போது அல்லு அர்ஜுனுக்கு 18 வயது.
தனக்கென தனித்துவ நடிப்பை எப்போதும் வெளிப்படுத்தும் அல்லு அர்ஜுனுக்கு அவருடைய ரசிகர்கள் மீது எப்போதும் ப்ரியம் இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுனுக்கு மாமா முறை. அவருடைய Indra படம் அல்லு அர்ஜுனின் பேவரைட். 15 முறைக்கு மேல் அந்தப் படத்தை பார்த்திருப்பாராம்.
அல்லு அர்ஜுன் டான்ஸ் பற்றி எல்லோருமே அறிவோம். அவர் பாடவும் கூடியவர் தான். Sarrainodu படத்தில் சவுண்ட் ட்ராக் ஒன்றை பாடியிருக்கிறார்.
அர்ஜுனுக்கு கார்கள் என்றால் பிடிக்கும். விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் தொடங்கி 7 கோடி மதிப்புள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Vanity van வரை இவரது லிஸ்ட் பெரிது.
17 வயதில் அவர் அபிசியலாக நடிக்க வந்திருந்தாலும் மூன்று வயது குழந்தையாக இருக்கும்போதே, அப்பா தயாரித்த படத்தில் திரையில் அறிமுகமாகிவிட்டார்.
இவரது பெரும்பான்மையான படங்கள் மலையாளத்தில் டப் செய்யப்படுவதற்கு காரணம் அவருக்கு இருக்கும் மலையாள ரசிகர்கள் தான். ஆர்யா-2 படம் 100 நாட்களுக்கு மேல் கேரளாவில் ஓடியது.
துறுதுறு நடிப்பு, ஸ்டைலான உடல்மொழி, பிரமிக்க வைக்கும் நடன அசைவுகள் இவை தான் அல்லுவின் அடையாளம். பிறந்தநாள் வாழ்த்துகள், ஐகான்!