கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று ஏழு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அப்பள்ளகளில் நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவ – மாணவிகள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெங்களூருவின் ஹென்னூர், கோவிந்தபுரா, மகாதேவபுரா உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து, பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது.
இது குறித்து தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்படும் என்று அவர் கூறினார்.