அஇஅதிமுக சார்பில் பல்வேறு கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு ஆபத்து காலங்களில் கயவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 10 மாதங்களிலேயே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பெருமளவில் அதிகரித்து வருகிறது, சரியான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளாத காரணத்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வரும் நிலை உருவாகியுள்ளது, பெண்களைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கவலை கொள்ளாத அரசாக இந்த விடியா அரசு செயல்பட்டு வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற
இந்த 10 மாதங்களிலேயே, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பெருமளவில் அதிகரித்து வருகிறது,
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வரும் நிலை உருவாகியுள்ளது,
பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய (1/2) pic.twitter.com/0ynDOakkqq— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 7, 2022
பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள காரணத்தினால் இன்று (07.04.2022) காலை சென்னையிலுள்ள எனது இல்லத்தில் அஇஅதிமுக சார்பில் பல்வேறு கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு ஆபத்து காலங்களில் கயவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள அஇஅதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.