மணிப்பூர் மாநிலத்தில் பெற்றோர் வேலைக்கு செல்வதை அடுத்து, சிறு குழந்தையான தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்ற சிறுமியின் கல்விச் செலவை ஏற்பதாக அம்மாநில அமைச்சர் அறிவித்துள்ளார்.
அம்மாநிலத்தின் இம்பால் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பமேய் (Pamei) என்ற பத்து வயது சிறுமி, பெற்றோர் வேலைக்கு செல்வதால், தனது தங்கையை கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் அவளையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றார்.
தனது சகோதரியை மடியில் வைத்துக்கொண்டு வகுப்பறையில் அவர் பாடங்களை கவனிப்பது போன்ற படம் இணையதளத்தில் வைரலானது.
இந்நிலையில், அந்த சிறுமியை தனது இல்லத்தில் சந்தித்த மணிப்பூர் அமைச்சர் பிஸ்வஜித் சிங், போர்டிங் பள்ளியில் அவர் படிக்க உதவுவதாகவும், பட்டப்படிப்பு வரையிலான கல்விச் செலவை ஏற்பதாக பெற்றோரிடம் உறுதி அளித்ததாகவும் கூறினார்.