வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம், ‘கதி சக்தி’ திட்டம் ஆகியவை, உலக பொருளாதார பாதிப்புகளிலிருந்து காத்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதாக, மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலக பொருளாதார நிலை, இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், அரசின் கதி சக்தி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்க தொகை திட்டம் ஆகியவை காத்துள்ளன. மேலும் வளர்ச்சியை அதிகரித்துள்ளன. உணவு, உரம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் மீதான புவிசார் அரசியல் தாக்கம், உலக அளவிலான வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவும் அதன் தாக்கத்தை உணரலாம்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தில் தாக்கத்தை தணிக்க, இந்திய பொருளாதாரம் எவ்வளவு மீள் தன்மை கொண்டது என்பதை பொறுத்து பாதிப்புகள் இருக்கும். அன்னிய நேரடி முதலீடு, வேலை வாய்ப்புகள், தயாரிப்பு துறை உற்பத்தி, தடுப்பூசி, ஜி.எஸ்.டி., வசூல் ஆகியவை அதிகரித்துள்ளது, சாதகமான அம்சங்களாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement