சமூக வலைதளத்தில் சில சுவாரஸ்யமான வீடியோக்கள் வலம் வருவதுண்டு. அதுபோல சமீபத்தில் தேதி, நேரம் குறிப்பிடப்படாத ஒரு வீடியோ, அதில் மண அலங்காரத்தில் மணமகனுக்கு பணமாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மணமகனின் நண்பன் ஒருவர் பணத்தை திருடும் காட்சி வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவுக்கு நகைச்சுவையான பல கமெண்டுகள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவுக்கு “Indian Money Heist” என்றும், “இது நண்பர்களுக்கு மத்தியில் வியாபார ஒப்பந்தம்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர், `கல்யாண பார்ட்டி வைக்காத மணமகன்களே, உஷார்’ என கமெண்ட்டுகள் பறக்கிறது.. இந்த வீடியோவை பார்க்கும் போது உங்களுக்கு தோன்றுவதை கமெண்டாக பதிவு செய்யுங்கள்.