வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‛மன் கி பாத்’ நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள் குறித்த யோசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி, மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ‛மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் ரேடியோ வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதுவரை 87 எபிசோடுகள் ஒலிபரப்பான நிலையில், 88வது எபிசோட் வரும் ஏப்.,24ம் தேதி ஒலிபரப்பாகிறது. ஒவ்வொரு எபிசோடிலும் பிரதமர் மோடி ஏதேனும் கருபொருளை மையமாக வைத்து கருத்துகளை பகிர்ந்து வரும் பிரதமர் மோடி, அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள் குறித்த யோசனைகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: ‛மன் கி பாத்’ நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள்கள் குறித்த யோசனைகள் வரவேற்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் அடிமட்ட அளவிலான மாற்றத்தை ஏற்படுத்துபவர்களின் அசாதாரண சாதனைகளை கொண்டாடுகிறோம்.
இத்தகைய உற்சாகமூட்டும் வாழ்க்கை பயணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? 24ம் தேதி ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்காக அவற்றை பகிரவும். உங்கள் யோசனைகளை MyGov, NaMo செயலி மூலம் பகிரலாம் அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Advertisement