மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பிசாசு 2’ படத்தின் தெலுங்கு உரிமையை விஜய் படத்தை தயாரிக்கும் தில்ராஜூ கைப்பற்றியுள்ளார்.
ஆண்ட்ரியா நடித்துள்ள ’பிசாசு 2’ படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. அந்த வேலைகள் முடிவடைந்ததும் மே மாதத்தில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருக்கிறார். தற்போது ’பிசாசு 2’ படத்திற்கான வியாபார வேலைகள் தொடங்கியுள்ளன. அதில், முதல் கட்டமாக தெலுங்கு வெளியீட்டிற்கான உரிமையை வம்சி பைடிப்பள்ளி கைப்பற்றியிருக்கிறார். ’விஜய் 66’ படத்தின் தயாரிப்பாளரும் தில்ராஜூ தான். ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் பெரும் விநியோகஸ்தராக தில் ராஜு இருப்பதால் ‘பிசாசு 2’ படம் தெலுங்கில் பெரிய அளவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் தெலுங்கு உரிமையை ரூ. 11 கோடிக்கு தில் ராஜு கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் இணைந்து சுரேஷ் பாபு, ஏசியன் சுனில் உள்ளிட்டோர் ‘பீஸ்ட்’ தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியுள்ளனர். மேலும், ‘கேஜிஎஃப் 2’ படத்தை தெலங்கானாவில் தில் ராஜுதான் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.