முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் – உ.பி. சாமியாருக்கு சிக்கல்!

உத்தர பிரதேச மாநிலத்தில், முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த சாமியார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத் தலைநகர் லக்னோவில் இருந்து, சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கைராபாத் என்ற இடத்தில், மசூதிக்கு வெளியே, அங்கிருந்த பொது மக்களிடையே சாமியார் ஒருவர் ஜீப்பில் அமர்ந்தபடி பேசுகையில், “ஒரு முஸ்லிம் இந்தப் பகுதியில் உள்ள பெண்களை துன்புறுத்தினால், இங்குள்ள முஸ்லிம் பெண்களைக் கடத்தி, பகிரங்கமாக பாலியல் பலாத்காரம் செய்வேன்” என கூறினார்.

இதற்கு அங்கிருந்த நபர்கள் கைத் தட்டி ஆரவாரம் செய்தனர். சாமியார் இருந்த ஜீப்பில் உத்தர பிரதேச மாநில காவல் துறையினரும் உடன் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் பட்டப் பகலில் சாமியார் ஒருவர் முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த, உண்மைச் சரிபார்ப்பு வலைதளமான ஆல்ட்நியூசின் இணை நிறுவனர் முகமது ஜுபைர், “வீடியோ ஏப்ரல் 2 அன்று எடுக்கப்பட்டது, ஆனால் ஐந்து நாட்களுக்குப் பிறகும் காவல் துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என, ட்விட்டரில் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த சீதாபூர் போலீஸ் மூத்த அதிகாரி, இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகவும், உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஜுபைரின் வீடியோ பதிவைத் தொடர்ந்து, பல ட்விட்டர் பயனர்கள் மதத் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடுமையான தலையீடு கோரி ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு மற்றும் தேசிய மகளிர் ஆணையத்திடம் முறையிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.