புதுடெல்லி: சாதாரண போன்கள் மூலம் வங்கி பரிவர்த்தனைகள், பணம் அனுப்புதல் போன்றவற்றை மேற்கொள்ள யுஎஸ்எஸ்டி என்ற குறுந்தகவல் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் மொபைல் போனில் பேசிய பிறகு மீதம் எவ்வளவு தொகை அல்லது அழைப்பு நிமிடங்கள் இருப்பு உள்ளது என்பது, இந்த யுஎஸ்எஸ்டி தகவல் மூலம்தான் வாடிக்கையாளரின் மொபைல் போனுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மொபைல் போன் மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த தகவல் அனுப்புவதற்கான கட்டணத்தை டிராய் ரத்து செய்துள்ளது. 2013ம் ஆண்டு யுஎஸ்எஸ்டி கட்டணமாக ஸ்ரீ1.50க்கு மேல் வசூலிக்கக் கூடாது என டிராய் உச்சவரம்பு நிர்ணயித்திருந்தது. 2016 அக்டோபரில் இது 50 காசாக குறைக்கப்பட்டது.