மைசூரு-இம்முறை மைசூரில் நடக்கும் உலக யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, பிரதமர் நரேந்திர மோடியிடம், பா.ஜ., எம்.பி., – பிரதாப் சிம்ஹா வேண்டுகோள் விடுத்தார்.டில்லி சென்றிருந்த எம்.பி., பிரதாப் சிம்ஹா, நேற்று முன்தினம், தன் குடும்பத்துடன் பிரதமர் மோடியை சந்தித்தார். மைசூரு மற்றும் யோகா தொடர்பாக விவரித்தார்.நேற்று அவர் கூறியதாவது: மைசூரு யோகா திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற நகராகும். இம்மாவட்டத்தில் பல ஆண்டுகளாக யோகா பயிற்சி நடக்கிறது. யோகாவை பிரபலப்படுத்த, மைசூரு மக்கள் பல பங்களிப்பை அளித்துள்ளனர்.ஐ.நா., சபை ஜூன் 21ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது. 2015 முதல் மைசூரில் யோகா தினம், அர்த்தமுள்ளதாக கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் ஆயிரக்கணக்கானோர் சேருகின்றனர். 2017ல் நடந்த யோகா தினத்தில் 55 ஆயிரத்து 506 பேர் பங்கேற்றதன் மூலம், உலக சாதனை நடத்தப்பட்டது.நடப்பாண்டு மைசூரில், 1.10 லட்சம் பேர் சேரும் வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம், யோகா அமைப்புகள், தொண்டு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் உட்பட, பலரும் யோகா தினத்தை வெற்றிகரமாக்க உழைக்கின்றனர். இம்முறை யோகா தினத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement