கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா உக்ரைனின் பதில் தாக்குதலால் திணறி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் புச்சா நகரை விட போரோடியங்காவில் நிலைமை மிகவும் பயங்கரமானதாக உள்ளது என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
புச்சா நகரில் 300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் 50-க்கும் மேற்பட்டோர் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர் என உக்ரைன் குற்றம் சாட்டி இருந்தது. இதை ரஷியா முற்றிலும் மறுத்தது.
தற்போது போரோடியங்காவில் ரஷிய தாக்குதல்களால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணிகள் துவங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…கனடாவில் ஜோம்பி நோய்- மூளை செயலிழந்து கொத்து கொத்தாக மடியும் மான்கள்