ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ஹிட் பங்கு.. நல்ல ஏற்றம் காணலாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பங்கு சந்தை முதலீடு செய்பவர்களில் பிரபலமானவர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஒரு பங்கினை வைத்திருக்கிறார் என்றாலே அது கவனத்தில் கொள்ள வேண்டிய பங்கு என பல டிரேடர்களும் நிணைப்பதுண்டு. இவரின் போர்ட்போலியோ பங்கினை தொடர்பவர்களும் சந்தையில் ஏராளம்.

அதிலும் அது டாடா குழும பங்கு எனும் போது வேண்டாம் என்று கூறி விட முடியுமா என்ன? இன்றும் பலரின் போர்ட்போலியோ முதலீடுகளிலும் இருக்கும், பங்குகளில் ஒன்று டாடா குழுமத்தினை சேர்ந்த பங்குகள்.

இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..!

அது டாடா பிராண்டின் மீதான நம்பிக்கை, டாடாவின் வணிக யுக்தி, மூலதன முதலீடு இப்படி எல்லாமே சாதகமாக இருக்கும் போது அவை நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய பங்குகள் தான்.

 தொடக்கமே வேற லெவல்

தொடக்கமே வேற லெவல்

இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கு டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா கம்யூனிகேஷன்ஸ். இப்பங்கின் விலையானது இன்று காலை தொடக்கத்திலேயே நல்ல ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக கடந்த அமர்வின் முடிவு விலையான 1326.25 ரூபாயினை காட்டிலும், இன்று காலை தொடக்கத்தில் 5.64% ஏற்றம் கண்டு, 1401 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது.

தற்போதைய பங்கு நிலவரம்

தற்போதைய பங்கு நிலவரம்

NSE-யில் இப்பங்கின் விலையானது தற்போது, 3.14% அதிகரித்து, 1369.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1400.80 ரூபாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது,1332.08 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1591.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1037.05 ரூபாயாகும்.

BSE-யில் இப்பங்கின் விலையானது தற்போது, 3.26% அதிகரித்து, 1369.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1401 ரூபாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது,1332.90 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1590 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1036.30 ரூபாயாகும்.

 

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் வசம்
 

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் வசம்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா மூலம் இப்பங்கினில் முதலீடு செய்துள்ளார். டிசம்பர் 2022 நிலவரப்படி, 1.08% அல்லது 30,75,687 பங்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்பங்கின் விலையானது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 18.82% அதிகரித்துள்ளது. இதே போல ஆறு மாதத்திற்கு பிறகு ஒரு வாரத்தில் 9.34% ஏற்றம் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலையானது 23.15% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது.

 

 டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

டாடா குழுமத்தினை சேர்ந்த இப்பங்கானது 100 நாள், 200 நாள், மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் மேலாக வர்த்தகமாகி (முடிவு விலை அடிப்படையில்) வருகின்றது. இது தவிர RSI, Stocostic என பல குறிகாட்டிகளும் விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காட்டுகின்றன.

நிபுணர்களின் பரிந்துரை என்ன?

நிபுணர்களின் பரிந்துரை என்ன?

எனினும் தற்போது ஒவர்பாட் லெவலில் உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். ஆக இப்பங்கின் விலையானது 1160 ரூபாய் என்ற லெவலில் கிடைத்தால் வாங்கலாம் என டிப்ஸ்2டிரேடர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பவித்ரா ஷெட்டி கூறுகிறார்.

என்ன லெவலில் வாங்கலாம்

என்ன லெவலில் வாங்கலாம்

இதே ஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனமும் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையும் 1680 ரூபாய் வரையில் செல்லலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதனை 1274.1 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாமென்றும் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் நிறுவனம்

தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் நிறுவனம்

டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் தொடர்ந்து தனது நெட்வொர்க்கினை விரிவுபடுத்தும் விதமாக முதலீடினை செய்து வருகின்றது. அதோடு அடுத்த தலைமுறை தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்தி வருகின்றது. மொத்தத்தில் அதன் டிஜிட்டல் சேவையினை மேம்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் இதன் எபிடா விகிதம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

This Rakesh jhunjhunwala portfolio stock may continue to up move, Right time to buy?

This Rakesh jhunjhunwala portfolio stock may continue to up move, Right time to buy?/ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ஹிட் பங்கு.. நல்ல ஏற்றம் காணலாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

Story first published: Friday, April 8, 2022, 15:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.