ருச்சி சோயாவின் பங்கு விலை 13% ஏற்றம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

சமையல் எண்ணெய் நிறுவனமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் ஃபாலோ ஆன் பப்ளிக் (FPO) மூலம் கடந்த மார்ச் 24 – 28 அன்று பங்கு வெளியீட்டினை செய்தது.

எஃப்பிஓ என்பது ஏற்கனவே பங்கு சந்தையில் பங்குகளை வெளியிட்டுள்ள ஒரு நிறுவனம், கூடுதல் பங்குகளை மீண்டும் பொது மக்களுக்கு வெளியிடுவதாகும். இதனை தொடர் பங்கு வெளியீடு என்று கூறுவார்கள்.

அந்த வகையில் ருச்சி சோயா நிறுவனம் அதன் தொடர் பங்கு வெளியீட்டின் மூலம் 4,300 கோடி ரூபாயை திரட்டியது.

ருச்சி சோயாவின் FPO.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு..!

 ஜூன் மாதமே விண்ணப்பம்

ஜூன் மாதமே விண்ணப்பம்

கடந்த ஜூன் மாதமே இந்த தொடர் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் 25% பங்குகள், பொது பங்களாக இருக்க வேண்டும். ருச்சி நிறுவனத்தில் அத்தகைய விதிமுறையினை பூர்த்தி செய்யும் விதமாகத் தான் இந்த தொடர் பங்கு வெளியீட்டினை செய்துள்ளது.

 இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

ருச்சி சோயா நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று NSE-யில் 12.93% அதிகரித்து, 923.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 938.70 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 825.75 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 1376.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 634 ரூபாயாகும்.

இதே BSE-ல் 12.95% அதிகரித்து, 924.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 940 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 825.70 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 1377 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 619 ரூபாயாகும்.

ஓராண்டு நிலவரம்?
 

ஓராண்டு நிலவரம்?

கடந்த இரு அமர்வுகளில் 22.54% ஏற்றம் கண்டுள்ளது. இன்று மட்டும் நேற்றைய முடிவு விலையுடன் ஒப்பிடும்போது, 12.94% ஏற்றம் கண்டுள்ளது.இதே கடந்த ஒரு வாரத்தில் 31.57% ஏற்றம் கண்டுள்ளது.

டெக்னிக்கல் பேட்டர்ன் விகிதமானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் மேலாகவும், இதே 200 மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் கீழாக வர்த்தகமாகி வருகிறது.

சந்தை மூலதனம்

சந்தை மூலதனம்

இந்த நிறுவனத்தில் மொத்தம் 20.24 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன. இதன் மதிப்பு 266.73 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் தற்போதைய சந்தை மூலதம் 33,479 கோடி ருபாயாகவும் உள்ளது.
ருச்சி சோயாவின் தொடர் பங்கு வெளியீடு மூலம் 66.15 மில்லியன் பங்குகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 4300 கோடி ரூபாயாகும்.

செல்லிங் பிரஷரில் பங்கு விலை

செல்லிங் பிரஷரில் பங்கு விலை

ருச்சி சோயாவின் பங்கு விலையானது மீடியம் டெர்மில் சற்று அழுத்தத்தில் காணப்படலாம். இது நீண்டகால நோக்கில் வாங்கியிருந்த முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். எனினும் எண்ணெய் வித்துகளின் தேவையானது நீண்டலாக நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங்கி வைக்கலாம். டெக்னிக்கலாக இதன் சப்போர்ட் விலை 700 ரூபாயாகவும் உள்ளது.

பங்கு விலை நிர்ணயம் எவ்வளவு?

பங்கு விலை நிர்ணயம் எவ்வளவு?

இந்த நிறுவனத்தின் தொடர் வெளியீட்டின் விலை நிர்ணயமானது 615 – 650 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

இதில் 21 பங்குகள் ஒரு லாட் ஆகும். ஆக வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் எனில் 21ன் மடங்கில் வாங்கிக் கொள்ளலாம். இதன் சந்தை மூலதனமானது. இது தற்போதைய சந்தை விலையில் இருந்து குறைந்த விலையில் கிடைப்பதால் மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
123333

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ruchi soya stock ends nearly 13% as new FPO shares make market debut

ruchi soya stock ends nearly 13% as new FPO shares make market debut /ருச்சி சோயாவின் பங்கு விலை 13% ஏற்றம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

Story first published: Friday, April 8, 2022, 18:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.