ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடெல்லி:

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே நீடிக்கும். வங்கிகளின் கடன்களுக்காக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றார்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன.

இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வட்டியை வங்கிகளிடம் பெறுகிறது. குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும்.

இதையும் படியுங்கள்… பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.