சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மனித நேயமக்கள் கட்சி உறுப்பினர் அப்துல்சமது, மணப்பாறையில் புறவழிச்சாலை அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். மேலும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதய குமார் தனது திருமங்கலம் தொகுதியில் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது நிதிஒதுக்கி அரசாணை வெளியிட்டும் மேம்பால பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும் அது எப்போது தொடங்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பதில் அளித்து பேசியதாவது:-
தமிழகத்தில் ரெயில்வே மற்றும் சாலை பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்துவது என்பது பிரச்சினையாக உள்ளது.வருவாய்துறை பணியாளர்கள் பல்வேறு பணிகளுக்கு மத்தியில் அதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் 5 மாவட்ட அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 154 தாசில்தார்களும் இடம் பெற்று உள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் பணிகளை இவர்கள் விரைந்து மேற்கொள்வார்கள். மணப்பாறை புறவழிச்சாலைக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதே போல உறுப்பினர் ஆர்.பி.உதய குமார் தொகுதியிலும்,மேம்பால பணிகளை தொடங்குவதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் அனுமதி