"வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி".. பிடிஆரை நேரில் அழைத்துப் பேசி மகிழ்ந்த மன்மோகன் சிங்!

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கியவர் போல உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறார் தமிழ்நாடு நிதியமைச்சர்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
. இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவராக அறியப்படும் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்
பிடிஆர்
பழனிவேல் தியாகராஜன்.

இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்றால் அது மன்மோகன் சிங்தான். ராஜீவ் காந்தி காலத்தில், தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை காங்கிரஸ் ஆட்சி மேற்கொண்டது. அதற்கு எம்.எஸ். அலுவாலியா மிகப் பெரிய உதவியாக இருந்தார்.

அடுத்து பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது
மன்மோகன் சிங்
நிதியமைச்சராக இருந்து பொருளாதார ரீதியாக இந்தியாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளுக்கு வித்திட்டார். மன்மோகன் சிங் பின்னர் பிரதமராக வந்தபோது இந்தியாவின் பொருளாதாரம் மேலும் பலமடங்கு வளர்ச்சி அடைந்தது.

பல்வேறு தொலை நோக்குத் திட்டங்களைக் கொண்டு வந்து இந்தியாவின் ஊரகப் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் வாய்ப்புகளை உருவாக்கியவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட மன்மோகன் சிங்கின் ஆட்சியையும், அவர் நிதியமைச்சராக இருந்து செய்த பணிகளையும் இப்போது பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்தியா பல்வேறு பொருளாதார ரீதியிலான சிக்கல்களைச் சந்திக்கும்போதெல்லாம் எல்லோருடைய கவனமும் மன்மோகன் சிங்கின் கடந்த கால ஆட்சியின் பக்கம்தான் திரும்புகின்றன. இந்த நிலையில் மன்மோகன் சிங், தமிழ்நாட்டு நிதியமைச்சர் பிடிஆர் பழனி்வேல் தியாகராஜனை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த தகவல் கிடைத்ததும் பெரும் மகிழ்ச்சி அடைந்த பிடிஆர்
டெல்லி
வந்து மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளார்.

பிடிஆர் பழனிவேல்ராஜன் தமிழ்நாடு கடந்து நாடு முழுவதும் பேசு பொருளாக திகழ்கிறார். காரணம், பொருளாதார வளர்ச்சி குறித்த அவரது தொலைநோக்கு பார்வைகள், தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த அவரது சிந்தனை உள்ளிட்ட சீரிய செயல்பாடுகளே. அனைத்து மாநிலங்களிலும், இப்படி ஒரு நிதியமைச்சர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவுக்கு பிடிஆரின் செயல்பாடுகள் உள்ளன.

இப்படிப்பட்டவருக்கு மன்மோகன் சிங்கை சந்திப்பது என்றால் மகிழ்ச்சி இருக்காதா என்ன.. அந்த சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் டிவீட் போட்டுள்ளார் பிடி.ஆர். இதுகுறித்து அவர் கூறுகையில், வரலாற்று நாயகன் மன்மோகன் சிங்கை சந்தித்தது எனது வாழ்க்கையின் பெரிய விஷயமாக கருதுகிறேன். அவருடைய உடல் நலம் காரணமாக அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. நான் அவருக்குக் கொடுத்த கிப்ட் உள்ளிட்டவற்றை மட்டுமே இங்கு புகைப்படமாக வெளியிடுகிறேன். அவர் பேசிய ஆதரவான வார்த்தைKள், ஆசிர்வாதம் ஆகியவற்றை விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதுகிறேன். என்றென்றும் அவை எனது நினைவுகளில் புதைந்திருக்கும் என்று கூறியுள்ளார் பி.டி.ஆர்.

தனது டெல்லி பயணத்தின்போது எம்.எஸ். அலுவாலியாவையும் சந்தித்து உரையாடியுள்ளார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். டெல்லி பயணத்தை வீணடிக்காமல், அருமையான பொருளாதார நிபுணர்களை சந்தித்து பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் உரையாடியிருப்பது தமிழ்நாட்டுக்கு பல நல்லதைக் கொண்டு வரும் என்று நம்புவோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.