விற்பனையைத் தொடங்கிய Samsung கேலக்ஸி ஏ73, கேலக்ஸி எம்33 ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவில் சாம்சங் தொடர்ந்து பல தரப்பட்ட விலையுள்ள ஸ்மார்ட்போன்களை பயனர்களுக்காக அறிமுகம் செய்தது. இதில் சாம்சங் கேலக்ஸி ஏ73 மற்றும் கேலக்ஸி எம்33 ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்னாப்டிராகன் சிப் உடனும், கேலக்ஸி எம்33 எக்ஸினோஸ் சிப் உடனும் கட்டமைக்கப்பட்டுள்ளது. விலை அதிகமான ஏ77 ஸ்மார்ட்போனில் OIS கேமராவும், விலைக் குறைவான எம்33 ஸ்மார்ட்போனில் சாதாரண கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியான சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை

இந்தியாவில்
Samsung Galaxy A73 5G
ஸ்மார்ட்போனின் 8GB + 128GB வேரியண்டின் விலை ரூ.41,999 ஆகவும், 8GB + 256GB வேரியண்டின் விலை ரூ.44,999 ஆகவும் உள்ளது. ஆவ்சம் கிரே, ஆவ்சம் மின்ட், ஆவ்சம் வைட் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Galaxy A73 5G-ஐ முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு Galaxy Buds Live ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் வெறும் ₹499க்கு கிடைக்கிறது. இது வழக்கமாக ரூ.6,990 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3,000 உடனடி கேஷ்பேக் சலுகையையும்
Samsung
வழங்குகிறது.

மலிவு விலை மோட்டோ போன் – ஆனா எந்த போனிலும் இல்லாத ஒரு ஸ்பெஷல் அம்சம் இருக்கு!

இந்தியாவில்
Samsung Galaxy M33 5G
6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரியின் விலை ரூ.17,999 ஆக உள்ளது. அதேசமயம் 8ஜிபி + 128ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.19,499 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக, சாம்சங் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுடன் ரூ.2,000 உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை Amazon.in மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ73 சிறப்பம்சங்கள் (Samsung Galaxy A73 Specifications)

Android 12
அடிப்படையிலான ONE UI 4 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. நான்கு வருடங்களுக்கு OS அப்டேட்ஸ் வழங்குவதாக சாம்சங் உறுதியளித்துள்ளது. 6.7″ இன்ச் FHD+ Infinity-O சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வரும் இந்த டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது.

புதிய OnePlus டிவி அறிமுகம் – இனி வீட்டிலேயே மினி தியேட்டர் அனுபவம்!

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G 5G Soc புராசஸர் உதவியுடன் இயங்குகிறது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத், NFC, WiFi போன்ற இணைப்பு ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்தவரை, 108MP OIS முதன்மை சென்சார், 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5MP மெகாபிக்சல் டெப்த் சென்சார், 5MP மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் கேமரா அமைப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா திரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்33 சிறப்பம்சங்கள் (Samsung Galaxy M33 Specifications)

Samsung Exynos 1280 ஆக்டாகோர் சிப்செட் இதில் உள்ளது. 6.6″ இன்ச் FHD+ எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வரும் இந்த டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையில் இயங்கும் ONE UI 4.0 நிறுவப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்தவரை, 50MP மெகாபிக்சல் F1.8 முதன்மை சென்சார், 5MP F2.2 அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மெகாபிக்சல் F2.4 டெப்த் சென்சார், 2MP மெகாபிக்சல் F2.2 மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் கேமரா அமைப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8MP மெகாபிக்சல் F2.2 கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத், NFC, WiFi போன்ற இணைப்பு ஆதரவுகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.