கோலார்-”நானும் மாம்பழ விவசாயி தான். குறிப்பிட்ட மதத்தினருக்கு கொடுக்கக் கூடாது என இங்கு எந்த விவாதமும் இல்லை; இது ஊடகங்களின் கற்பனை. இத்தகைய விவாதங்களை ஏற்படுத்த வேண்டாம் என கை கூப்பி கேட்கிறேன்,” என முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.கோலாரில் அவர் நேற்று கூறியதாவது:விவசாயிகள் புதிதாக நிலத்தில் மாம்பழம் விளைவிக்கவில்லை. விவசாயிகள் அன்யோன்யமாக உள்ளனர். எந்த பிரச்னையும் இல்லை. சமுதாயத்தில் ஊடகத்தினருக்கும் பொறுப்புள்ளது. தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்த வேண்டாம்.நானும் கூட மாம்பழ விவசாயி தான். எனக்கு யார் அதிகம் விலை கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு மாம்பழத்தை விற்பேன். குறிப்பிட்ட மதத்தினருக்கு கொடுக்கக் கூடாது என எந்த விவாதமும் இங்கு இல்லை.’ரமேஷ்குமார் வீட்டுக்கு செல்வேன்’ என முன்னாள் எம்.பி., முனியப்பா கூறியுள்ளார். இது ஜனநாயக நாடு. அவர் என் வீட்டுக்கு தாராளமாக வரட்டும்.ஆனால் நான் குளிக்க சென்றிருக்கும் போது வர வேண்டாம். அவ்வளவு பெரியவர்; பல பதவிகளை அலங்கரித்தவர். அவர் என் வீட்டுக்கு வந்து பேசினால், ஆசிர்வாதம் என நினைப்பேன்.அவருடன் அரசியல் பற்றி பேசமாட்டேன். அபிவிருத்தி குறித்து மட்டும் பேசுவோம். காங்கிரசை விட்டு விலகுவேன் என, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரை, நான் மிரட்டவில்லை.யாரையும் மிரட்டும் பழக்கம் எனக்கில்லை. நான் மிரட்டியதாக யார் உங்களிடம் கூறினரோ, அவரிடமே கேளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement